/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
ADDED : மே 11, 2024 01:22 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், சகாயத் தோட்டம் தொன்போஸ்கோ வேளாண்மை கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர் விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுஉள்ளனர்.
இதில், திருவள்ளுர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருந்து வேளாண் அலுவலர்கள் மற்றும் நான்காம் ஆண்டு மாணவியர் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பயன்கள், மண்வளம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து மாணவியருடன் விவசாயிகள் உரையாடினர்.
மேலும் பஞ்சகவ்வியம், அக்னிஅஸ்திரம், கடலைப் புண்ணாக்கு கரைசல், இ.எம்.கரைசல் ஆகியவை தயாரித்து, இவற்றை பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.