ADDED : மே 10, 2024 01:04 AM

திருவாலங்காடு,
திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதுாரில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டக்கல்லுாரி வளாகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் பிளஸ் 2 வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான 'கல்லுாரிக் கனவு 2024' நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இதில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ - - மாணவியர் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயபடிப்புகள் மற்றும் கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது.
மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விபரங்கள், வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் முழுதிலும் இருந்து, 700 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.