/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த விழிப்புணர்வு
/
காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த விழிப்புணர்வு
ADDED : மே 04, 2024 11:40 PM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றிய கிராமத்தில் தென்னை, பேரிச்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மரங்களை பாழ்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது காண்டாமிருகவண்டு.
அதை கட்டுப்படுத்தவும் அதில் இருந்து பாதுகாக்கும் வழிமுறையையும், வேளாண் கல்லூரி மாணவியர் விவசாயிகளுக்கு விளக்கினர்.
இதில் காண்டாமிருகவண்டுகளைப் பிடிக்க அதை கவரும் வகையிலான பெரோமோன் எனப்படும் வாசனை திரவத்தை ஒரு குடுவையில் அடைத்து தென்னை அல்லது பேரிச்சை மரத்தில் தொங்க விடலாம்.
இதில் வண்டுகள் தாமாக வந்து சிக்கி உயிரிழக்கும் இதன் செய்முறையை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.