/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் உற்பத்தியை மேம்படுத்த விழிப்புணர்வு
/
வேளாண் உற்பத்தியை மேம்படுத்த விழிப்புணர்வு
ADDED : ஏப் 30, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் சகாயத்தோட்டம் டான் பாஸ்கோ வேளாண்மை கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர், திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் பகுதியில், கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை மையமாக கொண்டு தாவரங்களின் வளர்ச்சியையும், உற்பத்தியையும் மேம்படுத்த பஞ்சகவ்யா, ஐந்திலை கரைசல், 3 ஜி கரைசல், முட்டை அமினோ அமிலம் மற்றும் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவற்றை செய்முறை விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பழையனூர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றனர்.