/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மலைபாதையில் 5 முதல் பேருந்துகளுக்கு தடை
/
திருத்தணி மலைபாதையில் 5 முதல் பேருந்துகளுக்கு தடை
ADDED : மே 31, 2024 02:44 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், லாரி மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு, வருகின்றனர்.
இதனால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கிருத்திகை, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோவிலில் முக்கிய விழாக்களின் போது, மலைப்பாதை போக்குவரத்து நெரிசலால் நடந்து செல்லும் பக்தர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், வருவாய் கோட்டாட்சியர் தீபா, டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் மலைக்கோவிலில் ஆய்வு செய்தனர்.
பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல், மலைக்கோவில் மேற்பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் லாரி, பேருந்து போன்ற வாகனங்களால் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்ப்பதற்காக வரும் ஜூன், 5ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்கள் மலைக்கோவில் மேற்பகுதியில் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதே போல், லாரி, பேருந்துகளில் வரும் பக்தர்கள் மலைக்கோவிலில் பக்தர்களை இறக்கியவுடன் வாகனங்கள் மலையடி வாரத்தில் நீதிமன்ற வளாகம்பின்புறத்தில் நிறுத்த வேண்டும்.
மேலும் ஆட்டோ நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்து குறித்து முடிவெடுக்கப்பட்டது.