/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் அடங்காத பேனர் கலாசாரம்..
/
தேசிய நெடுஞ்சாலையில் அடங்காத பேனர் கலாசாரம்..
ADDED : செப் 09, 2024 06:48 AM

திருவள்ளூர்: தேசிய நெடுஞ்சாலை உட்பட பல இடங்களில் திருமணம், பிறந்தநாள், நினைவஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரண்வாயல்குப்பம் பகுதியில் பயணியர் நிழற்குடை பகுதி உட்பட நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பதும் அதிகரித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின்கம்பங்களில் விளம்பரங்கள் வைப்பதால் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் மின்கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.