/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர் மண்டி வீணாகி வரும் பெரிய ஏரி நீர் கால்வாய்
/
புதர் மண்டி வீணாகி வரும் பெரிய ஏரி நீர் கால்வாய்
ADDED : ஆக 09, 2024 01:01 AM

கடம்பத்துார்,:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அழிஞ்சிவாக்கம் ஒட்டேரிக்கு செல்லும் வகையில் கால்வாய் உள்ளது.
இதில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் உள்ள நீர் வெளியேறும் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
இந்த வரத்துக் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
வரத்துக் கால்வாயை சீரமைக்க கோரி, பலமுறை நீர்வள ஆதாரத்துறையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத் துறையினர், ஏரியிலிருந்து நீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.