ADDED : ஜூன் 25, 2024 11:54 PM
பொன்னேரி, பொன்னேரி அடுத்த சோமஞ்சேரிகாலனியை சேர்ந்தவர் கோபி, 42; டிராக்டர் டிரைவர். இவர் நேற்று மாலை, பொன்னேரி சென்றுவிட்டு, இரவு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
பொன்னேரி - ஆலாடு சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, கொளத்துார் கிராமம் அருகே எதிரில் வந்த, மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், கோபி, மற்றொரு பைக்கில் வந்த சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அருணாச்சலம், 35, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கோபி இறந்துவிட்டதாக தெரிவிக்கப் பட்டது. பலத்த காயங்களுடன் அருணாச்சலம், முதலுதவி சிகிச்சை பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.