/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டட அனுமதி பணிகள் முடக்கம்; 10 நாட்களாக தொடர்கிறது அவதி
/
கட்டட அனுமதி பணிகள் முடக்கம்; 10 நாட்களாக தொடர்கிறது அவதி
கட்டட அனுமதி பணிகள் முடக்கம்; 10 நாட்களாக தொடர்கிறது அவதி
கட்டட அனுமதி பணிகள் முடக்கம்; 10 நாட்களாக தொடர்கிறது அவதி
ADDED : ஜூன் 24, 2024 11:39 PM
சென்னை : சென்னை மாநகராட்சியில்,'ஆன்லைன்' முறையில் கட்டட அனுமதிக்கான வரைபட ஆய்வு பணிகள், 10 நாட்களாக முடங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பொது கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இதன்படி, 10,000 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்கலாம்.
இது தொடர்பான பணிகளை,'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள, ஒருங்கிணைந்த ஒற்றை சாளர முறை இணையதளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், கட்டட வரைபடங்களை உடனுக்குடன் ஆய்வு செய்ய, 'ஆட்டோ டி.சி.ஆர்.,' எனப்படும், தானியங்கி முறையில் வரைபடங்களை ஆய்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
புதிதாக வீடு கட்டுவோர், உரிமம் பெற்ற பொறியாளர்கள் வாயிலாக வரைபடங்களை தயாரித்து, இதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த வரைபடங்கள் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பது, ஒரு மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும். தானியங்கி முறையில் இந்த ஆய்வு செய்யப்படுவதால், அடுத்த கட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில், வரைபட ஆய்வு பிரிவு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தகட்ட பணிகளை தொடர முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி பணிகள் தாமதமாகின்றன. இந்நிலையில், வரைபட ஆய்வுக்கான வசதியும், 10 நாட்களாக முடங்கியுள்ளது.
இதனால், புதிய கட்டட வரைபடங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. இது குறித்து விசாரித்தால், மென்பொருள் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாற்று வழியை ஏற்பாடு செய்யாமல் இப்படி பாதியில் நிறுத்தினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.