ADDED : ஆக 05, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் சில தினங்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 3:00 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மாலை, 4:00 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. காலையில் உக்கிரத்துடன் துவங்கிய வெயிலின் தாக்கம், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாலங்காடில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை துவங்கி நள்ளிரவு வரை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, மணவூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.