/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூவரை பிடித்து போலீசார் விசாரணை
/
சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூவரை பிடித்து போலீசார் விசாரணை
சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூவரை பிடித்து போலீசார் விசாரணை
சோழவரத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூவரை பிடித்து போலீசார் விசாரணை
ADDED : ஆக 16, 2024 10:55 PM
சோழவரம்:சோழவரம் கோட்டைமேடு காலனியைச் சேர்ந்தவர் ஜெகன், 38; சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர்.
நேற்று முன்தினம் ஐந்து பேர் கும்பல், இவரது வீட்டின் நுழைவாயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியது.
அடுத்து, சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ், 37, என்பவரது வீட்டிற்குள் கத்தியுடன் புகுந்த அதே கும்பல், அங்கிருந்தோரை மிரட்டி கார், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.
மூன்றாவதாக, சோழவரம், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையிலுள்ள லாரி பார்க்கிங் பகுதியில், லாரி டிரைவர் சிவா என்பவரை கத்தியால் வெட்டி, அங்கும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்றது.
இதையடுத்து, இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சோழவரம் பகுதியைச் சேர்ந்த டியோ கார்த்திக், 21, மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தததால், அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, ஆந்திராவில் பதுங்கியிருந்த டியோ கார்த்திக், குதிரை சுரேஷ் எனும் சுரேஷ்குமார், 21, கோபி, 25, ஆகிய மூவரைப் பிடித்து, சென்னை கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில், நேற்று முன்தினம் மாமூல் வசூலிக்க கிளம்பிய கும்பல், மாமூல் தராததால் ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தெரிகிறது.
சோழவரம் பிரபல ரவுடி சேதுபதியின் கூட்டாளியான கார்த்திக் மீது, இரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சேதுபதியை, கடந்த மாதம் 17ம் தேதி, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சேதுபதி சிறையில் இருப்பதால், கூட்டாளியான கார்த்திக் மாமூல் வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.