ADDED : ஜூன் 24, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த நந்தி வேடந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் கிரன், 13. இவர் திருத்தணி கசவராஜபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் திண்ணையில் துாங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்ததில் அலறி துடித்தார்.
இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.