/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
/
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
ADDED : ஜூலை 15, 2024 11:18 PM

சென்னை: மத்திய அரசின் குறு, சிறு தொழில் அமைச்சகம், பிட் இந்திய அமைப்பு சார்பில், சிறுவர்களுகான மாநில தடகளப் போட்டி, வண்டலுாரில் நடந்தது.
இதில், 76 பள்ளிகள் மற்றும் ஒன்பது தனியார் அகாடமிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானமாணவ - மாணவியர்பங்கேற்றனர்.
போட்டியில், சென்னை செம்மஞ்மேரியில் உள்ள செயின்ட் ஜோசப்பள்ளியில் இருந்து, 75 மாணவ - மாணவியர்பங்கேற்றனர்.
அப்பள்ளியின்மாணவர்கள் ஒட்டு மொத்தமாக, 5 தங்கம்,9 வெள்ளி, 8 வெண்கலபதக்கங்களை வென்று, இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றது.
அதே பள்ளியின்சினாமிகா, இறை அருள் ஆகியோர் தனி நபர்'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினர்.
போட்டியில், முதலிடத்தை கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மலை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி கைப்பற்றியது.