/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு சுவார் இல்லாத பாலம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
தடுப்பு சுவார் இல்லாத பாலம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
தடுப்பு சுவார் இல்லாத பாலம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
தடுப்பு சுவார் இல்லாத பாலம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 05, 2024 11:13 PM

பொன்னேரி,: பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் இருந்து, ஆமூர் வழியாக ஜனப்பச்சத்திரம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், ஆமூர் ஏரியின் கலங்கல் நீர் வெளியேறும் பகுதியில் உள்ள சிறு பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லை.
வாகனங்கள் எதிர் எதிரே பாலத்தில் பயணிக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன.சிறிது கவனம் சிதறினாலும், கார், வேன் உள்ளிட்டவை பாலத்தில் இருந்து கீழே விழும் நிலை உள்ளது.
இந்த சாலை வழியாக தனியார் பள்ளி வாகனங்களும், ஆமூர், மாலிவாக்கம், நரசிங்கமேடு, நெடுவரம்பாக்கம் என, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பயணிக்கின்றன.
சிறுபாலத்தில் தடுப்பு சுவர் மற்றும் எச்சரிக்கைகள் இல்லாததால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க, மேற்கண்ட சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேகத்தடை இல்லை
l திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசுஉயர்நிலைப்பள்ளி மற்றும் மப்பேடு, மணவாள நகர் காவல் நிலையம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதி உள்ளன.
இந்த நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், பள்ளி, கல் லுாரி,தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுரக வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் அரசு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், ஊராட்சிக்கு வரும் பயனாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலையில் மப்பேடு, மணவாளநகர் காவல் நிலையம் செல்லும் சந்திப்பு பகுதிக்கு வரும் மற்றும் செல்லும் வாகனங்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றன.சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மப்பேடு மற்றும் மணவாளநகர் காவல்நிலையம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.