/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொண்டாபுரத்திற்கு பேருந்து: பயணியர் கோரிக்கை
/
கொண்டாபுரத்திற்கு பேருந்து: பயணியர் கோரிக்கை
ADDED : மே 31, 2024 02:41 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து கொண்டாபுரம் வழியாக சோளிங்கருக்கு சாலை வசதி உள்ளது. கொண்டாபுரம், கொண்டாபுரம் காலனி மற்றும் அம்மேனேரி உள்ளிட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பேருந்து வசதி இல்லை.
இவர்கள் ஆர்.கே. பேட்டை மற்றும் சோளிங்கர் பகுதிக்கு தினசரி பல்வேறு பணி காரணமாக சென்று வருகின்றனர். எந்தவொரு மார்க்கத்திலும் இந்த கிராமத்தினருக்கு பேருந்து வசதி இல்லாததால், நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், கொண்டாபுரத்தில் இருந்து சோளிங்கர் மற்றும் ஆர்.கே.பேட்டை செல்லும் மார்க்கத்தில் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன.
மேம்பாலம் மற்றும் தார் சாலை வசதியும் உள்ளன. கொண்டாபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் மார்க்கத்தில் ஞானகொல்லிதோப்பு ஓடை பாய்கிறது.
சமீபத்தில் இந்த ஓடையின் குறுக்காகவும் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ளது. பேருந்து பயணிக்க அனைத்து வசதிகளும் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததால், கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து கொண்டாபுரம் வழியாக சோளிங்கருக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.