/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் நஷ்டம், கடன் தொல்லை விடுதியில் வாலிபர் தற்கொலை
/
தொழில் நஷ்டம், கடன் தொல்லை விடுதியில் வாலிபர் தற்கொலை
தொழில் நஷ்டம், கடன் தொல்லை விடுதியில் வாலிபர் தற்கொலை
தொழில் நஷ்டம், கடன் தொல்லை விடுதியில் வாலிபர் தற்கொலை
ADDED : மே 04, 2024 09:44 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மார்க்கெட் தெருவில் வசித்து வந்தவர் பூபாலன், 33. இவருக்கு மனைவி, 4 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பூபாலன் லாரி வாங்கி தொழில் செய்து வந்ததில் நஷ்டம் அடைந்தார்.
லாரி வாங்குவதற்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் பூபாலன் பதில் கூற முடியாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு, பூபாலன் திருத்தணி பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை, 9:00 மணி வரை அறையின் கதவு திறக்கப்படாததால் விடுதி மேலாளர் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது பூபாலன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.