ADDED : பிப் 21, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியில் வசித்தர் ரபீக், 47. தேங்காய் மண்டி நடத்தி வந்தார். இம்மாதம், 18ம் தேதி, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி டூ-- வீலரில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, ஈகுவார்பாளையம் கிராமம் அருகே, சாலையின் குறுக்கே வேகமாக கடந்த காட்டுப்பன்றி ஒன்று டூ-- - வீலரில் சிக்கியது. தடுமாறி விழுந்த ரபீக், பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

