/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
/
கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 01, 2024 09:56 PM
திருவள்ளூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவள்ளூரில் கோடைக்கால பயிற்சி முகாம், கடந்த 29ல் துவங்கியது. வரும் 13 வரை காலை - மாலை என, இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது.
இந்த 15 நாள் பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி கட்டணம் 200 ரூபாய். இந்த முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். இப்பயிற்சி முகாமில் பங்கேற்க, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03482 என்ற மொபைல்போன் எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

