/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடையூறாக நிறுத்தப்பட்ட 4 ஆட்டோ மீது வழக்கு
/
இடையூறாக நிறுத்தப்பட்ட 4 ஆட்டோ மீது வழக்கு
ADDED : மே 10, 2024 08:07 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்புறம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஷேர் ஆட்டோக்களில் பயணியரை ஏற்றுவதில் போட்டி ஏற்படுவதால், சாலையில் தாறுமாறாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று திருவள்ளூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நான்கு ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அந்த ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை கடிதமும் அனுப்பியுள்ளனர்.