/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 11:38 PM

திருவள்ளூர் : கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய பலி குறித்து சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டம் சார்பில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும், சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலர்கள், ரமணா, பெஞ்சமின், மூர்த்தி, பலராமன் மற்றும் நிர்வாகிகள் என, 800க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என, கட்சி நிர்வாகிகளிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சாலையோரமாக நின்று பேசிய கட்சி நிர்வாகிகள், 'கள்ளக்குறிச்சி கள்ள சாராய பலி சம்பவத்தை தடுக்க முயன்ற தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். சி.பி.சி.ஐ.டி.,விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியாது என்பதால், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என வலியுறுத்தி பேசினர்.