/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனித உயிர் காத்தோருக்கு மத்திய அரசு விருது
/
மனித உயிர் காத்தோருக்கு மத்திய அரசு விருது
ADDED : ஜூன் 06, 2024 10:54 PM
திருவள்ளூர்:மனிதாபிமானத்துடன், இக்கட்டான சூழ்நிலையில் மனித உயிர்களை காத்தோருக்கு, மத்திய அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் உள்துறை சார்பில் மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு, 'சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக், உத்தம் ஜீவன் ரக்சா பதக்' மற்றும் 'ஜீவன் ரக்சா பதக்' ஆகிய விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கு வீர சேவை புரிந்தோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர், 2022 அக்., 1 முதல், தற்போது வரை ஆற்றிய வீர சேவையை கருத்துரு மற்றும் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி குறிப்பு ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும், பணி நேரத்தில் இல்லாமல், இத்தகைய வீர சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, வரும் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.