/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவான்மியூர் அரசு பள்ளி வாலிபால் போட்டியில் 'சாம்பியன்'
/
திருவான்மியூர் அரசு பள்ளி வாலிபால் போட்டியில் 'சாம்பியன்'
திருவான்மியூர் அரசு பள்ளி வாலிபால் போட்டியில் 'சாம்பியன்'
திருவான்மியூர் அரசு பள்ளி வாலிபால் போட்டியில் 'சாம்பியன்'
ADDED : மே 04, 2024 11:36 PM

சென்னை:சென்னை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் வாலிபால் பயிற்சியாளர்கள் இணைந்து, யூ - 13 வாலிபால் போட்டியை, சென்னையின் பல்வேறு பள்ளிகளில் நடத்தி வருகின்றன.
கடந்த வாரம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில், ஒன்பது அணிகள் பங்கேற்ற வாலிபால் லீக் போட்டி நடத்தியது. இதில், செயின்ட் பீட்ஸ், ஆலந்துார் மான்போர்ட், ராயபுரம் செயின்ட் பீட்ஸ், திருவான்மியூர் அரசு பள்ளி உட்பட ஆறு அணிகள் இரண்டாவது லீக் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று காலை 6:00 மணிக்கு, ஆலந்துாரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் இரண்டாவது சுற்றுக்கான 'லீக்' ஆட்டங்கள் நடந்தன. அனைத்து 'லீக்' சுற்றுகள் முடிவில், திருவான்மியூர் அரசு பள்ளி அணி, 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
அதைத்தொடர்ந்து, ஆலந்துார் மான்போர்ட் பள்ளி 12 புள்ளிகளும், செயின்ட் பீட்ஸ் ஒன்பது புள்ளிகளும், செயின்ட் பீட்டர்ஸ் ஆறு புள்ளிகளும், ராயபுரம், பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி மூன்று புள்ளிகளும் பெற்றன.
மேற்கண்ட ஐந்து பள்ளிகள், அடுத்தவாரம் ராயபுரத்தில் நடக்கும் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.