sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சென்ட்ரலில் ரயில்பாதை மேம்பாட்டு பணி விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

/

சென்ட்ரலில் ரயில்பாதை மேம்பாட்டு பணி விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்ட்ரலில் ரயில்பாதை மேம்பாட்டு பணி விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்ட்ரலில் ரயில்பாதை மேம்பாட்டு பணி விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்


ADDED : மார் 29, 2024 09:10 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதைகளின் மேம்பாட்டு பணி நடக்க உள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

l கேரளா மாநிலம் ஆலப்புழா - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத், கொச்சுவேளி - கோரக்பூர் விரைவு ரயில்கள், வரும் 2ம் தேதி பெரம்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும்

l மத்திய பிரதேச மாநிலம் இந்துார் - கொச்சுவேளி, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில்கள் வரும் 1ம் தேதி பெரம்பூர் வழியாக இயக்கப்படும்

l ஈரோடு - சென்னை சென்ட்ரல், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் மெயில் விரைவு ரயில்கள் வரும் 2ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெயில் விரைவு ரயில் வரும் 2ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

l மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - சென்னை சென்ட்ரல் இரவு 11:55 மணி மெயில் ரயில் வரும் 1ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமார் கோரமண்டல் விரைவு ரயில் வரும் 3ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் வரும் 2ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்

l ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 2ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை - கோவை சிறப்பு ரயில்கள்


தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவையில் இருந்து நாளை இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்
l சென்னை சென்ட்ரலில் இருந்து 1ம் தேதி காலை 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 8:25 மணிக்கு கோவை சென்றடையும்.இந்த ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களின், டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us