/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வள்ளிமலை முருகர் கோவிலில் வரும் 10ல் தேர் திருவிழா
/
வள்ளிமலை முருகர் கோவிலில் வரும் 10ல் தேர் திருவிழா
வள்ளிமலை முருகர் கோவிலில் வரும் 10ல் தேர் திருவிழா
வள்ளிமலை முருகர் கோவிலில் வரும் 10ல் தேர் திருவிழா
ADDED : மார் 04, 2025 07:22 PM
வள்ளிமலை:வள்ளியை முருப்பெருமான் கவர்ந்த தலம், வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை. வள்ளி மலைக்கோவில் மற்றும் மலையடிவாரத்தில் சரவணபொய்கையை ஒட்டிய கோவிலிலும் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
இதில், மலை மீது அமைந்துள்ளது குகைக்கோவில். இக்கோவில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வள்ளிமலையில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாசி பிரம்மோற்சவம் வள்ளிமலையில் மிகவும் பிரசித்தமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
நேற்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மயில் வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். சிம்மம், தங்கமயில், நாக வாகனம், அன்னம், யானை வாகனம் என, தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் முருகப்பெருமான், வரும் 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு தேரில் பவனி வருகிறார்.
வள்ளிமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் எழுந்தருளும் முருகப்பெருமான், கோட்டநத்தம், சின்னகீசகுப்பம், சோமநாதபுரம், பெருமாள் குப்பம் என, பல்வேறு கிராமங்களை கடந்து, 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு கோவில் நிலைக்கு வந்தடைகிறார்.