/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் தேர் மண்டபம் சேதம்; கோவில் நிர்வாகம் அலட்சியம்
/
திருவாலங்காடில் தேர் மண்டபம் சேதம்; கோவில் நிர்வாகம் அலட்சியம்
திருவாலங்காடில் தேர் மண்டபம் சேதம்; கோவில் நிர்வாகம் அலட்சியம்
திருவாலங்காடில் தேர் மண்டபம் சேதம்; கோவில் நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஆக 16, 2024 11:17 PM

திருவாலங்காடு : திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் கமலத்தேர் என அழைக்கபடுகிறது. பங்குனி உத்திர விழாவில் தேர் உலா வரும் நிகழ்வு பிரசித்து பெற்றதாகும்.
இந்த தேரை பாதுகாப்பாக நிறுத்த காவல் நிலையம் அருகே 1916ம் ஆண்டு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் கூரை தற்போது விரிசல் அடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் நிலையில் கூரை விழுந்தால் அவர்கள் காயமடையும் சூழல் உள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உள்ளூர்வாசிகள் ஓராண்டாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்டடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழும் முன் அதனை சீரமைக்க அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.