/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி
ADDED : ஏப் 26, 2024 08:11 PM
திருவள்ளூர்:கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் மாணவர் சேர்க்கை இணையவழியில் துவங்கி உள்ளது.
திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு பெறக் கூடியதற்கான, முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை, வரும் 29ல் துவங்குகிறது.
சென்னை கூட்டுறவு மேலாண் நிலையத்தில், இப்பயிற்சி செப். முதல் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டணம் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, சென்னை பிராட்வேயில் உள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரடியாகவோ அல்லது 044 - 25360041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

