/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
200 கிலோ குட்கா பறிமுதல் சென்னை வாலிபருக்கு சிறை
/
200 கிலோ குட்கா பறிமுதல் சென்னை வாலிபருக்கு சிறை
ADDED : பிப் 21, 2025 08:55 PM
திருவள்ளூர்:ஆந்திராவில் இருந்து குட்கா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி நேற்று காலை திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் திருப்பாச்சூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ேஹாண்டா சிட்டி காரை நிறுத்தி சோதனை செய்தபோது 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் சுகுமார், 34 என்பதும், இவர் தற்போது சென்னை அசோக்நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் குட்காவை பறிமுதல் செய்து சுகுமாரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

