/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் மருந்தகம் 33 இடங்களில் திறப்பு
/
முதல்வர் மருந்தகம் 33 இடங்களில் திறப்பு
ADDED : பிப் 24, 2025 11:57 PM

திருவள்ளூர், தமிழகம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று, திறந்து வைத்தார்.
இதையொட்டி, திருவள்ளூர், வி.எம்.நகரில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர், காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், புதிய மருந்தகத்தை பார்வையிட்டனர்.
பின், அமைச்சர் நாசர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், தொழில் முனைவோருக்கு 15, கூட்டுறவு சங்கங்களுக்கு 18 என, 33 மருந்தகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொன்னேரி வட்டம் - 3, கும்மிடிப்பூண்டி - 3, திருவள்ளூர் - 12, ஆவடி - 4, ஊத்துக்கோட்டை - 2, பூந்தமல்லி - 3, திருத்தணி - 4, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தலா 1 என, 33 மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

