/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சேதம்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சேதம்
ADDED : ஆக 16, 2024 11:17 PM

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், அரிசந்திராபுரம் சாலையில் அமைந்துள்ளது குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம். 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் 2007ம் ஆண்டு, 49 ஆயிரத்து 500 ரூபாயில் பழுது பார்த்தல் பணி நடந்தது.
தற்போது இந்த அலுவலகம் தொழுதாவூர், சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 50 அங்கன்வாடி மையத்தின் தலைமையிடமாக உள்ளது. இந்த அலுவலகத்தில் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் கூட்டம் நடத்தப்படுகிறது.
தற்போது கட்டடம் ஆங்காங்கே சேதமடைந்து கூரை முழுதும் பெயர்ந்து சுவர்கள் விரிசல் அடைந்து காணப்படுகிறது.
இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

