/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிறிஸ்துவ சர்ச் உண்டியல் உடைப்பு
/
கிறிஸ்துவ சர்ச் உண்டியல் உடைப்பு
ADDED : மே 30, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஜோதி நகரில், சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளது. இங்கு, தினமும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வருவோர், உண்டியலில் தங்களது காணிக்கையை பணமாக செலுத்திவிட்டு செல்வர்.
நேற்று அதிகாலை இந்த சர்ச்சுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து சர்ச் செயலர் நேருதாஸ், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனம். மேலும், உண்டியலில் இருந்து 5,700 ரூபாய் திருடு போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.