/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவிழாவில் மோதல் இருவருக்கு 'காப்பு'
/
திருவிழாவில் மோதல் இருவருக்கு 'காப்பு'
ADDED : மே 29, 2024 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகையில், கடந்த 24ம் தேதி பொன்னியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில், சுவாமி ஊர்வலத்தின் போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 24, மற்றும் பத்ரி, 22, இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, குமார் மற்றும் முருகன் என, இருதரப்பினரும் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீசார் விசாரணையின் போதும், இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.