/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆழ்கடலில் 3,000 கிலோ பிளாஸ்டிக் சேகரித்த 5ம் வகுப்பு மாணவி
/
ஆழ்கடலில் 3,000 கிலோ பிளாஸ்டிக் சேகரித்த 5ம் வகுப்பு மாணவி
ஆழ்கடலில் 3,000 கிலோ பிளாஸ்டிக் சேகரித்த 5ம் வகுப்பு மாணவி
ஆழ்கடலில் 3,000 கிலோ பிளாஸ்டிக் சேகரித்த 5ம் வகுப்பு மாணவி
ADDED : மே 29, 2024 06:29 AM

சென்னை, : நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த், 42. ஆழ்கடல் பயிற்சியாளர். கடல் வளத்தை பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இவரது குழுவினர், நீலாங்கரையில் இருந்து 6 கி.மீ., கடல் துாரத்தில், 60 அடி ஆழத்தில் யோகா, சைக்கிள் ஓட்டுவது, செஸ், கிரிக்கெட் விளையாடுவது, தேசிய கொடியை பறக்க விட்டது, திருமணம் நடத்தி வைத்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
அரவிந்தின் மகள் தாரகை ஆராதனா, 9. இவரும், தந்தைக்கு நிகராக ஆழ்கடலில் பல சாதனைகள் படைத்து வருகிறார்.
இவரின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கடந்த 24ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பாடி என்ற (PADI) டைவிங் பயிற்றுனர்களின் தொழில்முறை சங்கம் சார்பில், 'ஜூனியர் ஓபன் வாட்டர் ஸ்கூபா டைவர்' என்ற உரிமம் வழங்கியது.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நீலாங்கரையில் 5 கி.மீ., துார கடலில், 45 அடி ஆழத்திற்கு சென்று, இரண்டு ஆண்டில், 3,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே கொண்டு வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே, இலங்கை -- இந்தியா கடலில் 11:30 நிமிடத்தில், 30 கி.மீ., நீந்தினார். மேலும், நீலாங்கரை - மெரினா மற்றும் கோவளம் - மெரினா இடையே கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து, தாரகை ஆராதனா கூறியதாவது:
ஒவ்வொரு முறையும், கடலோர பாதுகாப்பு துறை அனுமதி பெற்று, சுவாச உபகரணங்கள் அணிந்து கடலுக்குள் செல்கிறேன். உலகில் 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில், முதல் முறையாக எனக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இதுவரை, இந்திய அளவில் ஆழ்கடலில் சாதனை படைத்துள்ளேன். எனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், உலகளவில் ஆழ்கடல் ஆராய்ச்சி, சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.