/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
கடம்பத்துாரில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 02, 2024 11:46 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது.
கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சி பகுதிவாசிகள் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பகுதிவாசிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பெறலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறித்தியுள்ளதாக கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.மணிசேகர் தெரிவித்துள்ளார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும் முகாமில் வருவாய், வேளாண், என பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பகுதிவாசிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.