/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., 'ஆப்சென்ட்'

ADDED : ஆக 13, 2024 07:02 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு, கண்ணுார், கீழச்சேரி, கல்லம்பேடு, புதுப்பட்டு, திருப்பந்தியூர், கொண்டஞ்சேரி, கொட்டையூர், எறையாமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று மப்பேடில் நடந்தது.
மப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சித்தய்யா ஜெகதீசன், கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் மணிசேகர், செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் கடம்பத்துார் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், வருவாய், கால்நடை, சுகாதாரம், வேளாண்மை உட்பட பல துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். மொத்தம் 2,144 பகுதிவாசிகள் பங்கேற்று வீட்டு மனை பட்டா, புதிய மின் இணைப்பு என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளதாக ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த முகாமில் திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்காதது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.