/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலர் கைது
ADDED : ஜூலை 12, 2024 05:13 PM

அம்பத்துார் : அம்பத்துார், வெங்கடாபுரம் கூட்டுறவு சங்கத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்காக, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக, கூட்டுறவு சங்கச் செயலர் ஆறுமுகம் என்பவரை அணுகி உள்ளார். 'கடன் பெற்று தர வேண்டும் என்றால், 40,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என, ஆறுமுகம் கேட்டுள்ளார்.
மேலும், 'அந்த பணத்தை டீ வாங்கி வருவதை போன்று, தேநீர் கோப்பையில் வைத்து எடுத்து வருமாறு' கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,யிடம் கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்தார்.
அவரது அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதை தேநீர் கோப்பையில் எடுத்து வந்து ஆறுமுகத்திடம் கிருஷ்ணமூர்த்தி கொடுத்தார்.
அதை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.