/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு அரவைக்கு விவசாயிகள் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
/
கரும்பு அரவைக்கு விவசாயிகள் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
கரும்பு அரவைக்கு விவசாயிகள் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
கரும்பு அரவைக்கு விவசாயிகள் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
ADDED : மே 30, 2024 12:26 AM
திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவத்திற்கு விவசாயிகள், ஜூன் 30க்குள் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023 - -24 அரவை பருவத்தில், 19.64 கோடி கிலோ கரும்பு அரவை செய்யப்பட்டது. 2024 - -25 அரவை பருவத்திற்கு, 20 கோடி கிலோ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை விவசாயிகள், 6,812 ஏக்கர் கரும்பு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளுர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டங்களில் கரும்பு பயிரிட்டு இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத சாகுபடி பரப்பை, ஆலையின் கரும்பு அலுவலர் மற்றும் கரும்பு உதவியாளர்கள் விவசாயிகளை தொடர்பு கொண்டு பதிவு செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை கரும்பு சாகுபடி பரப்பை, ஆலைக்கு பதிவு செய்யாமல் இருக்கும் விவசாயிகள், ஜூன் 30க்குள் பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் பெற ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலரை 99439 66322 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.