/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வியை தொடர கலெக்டர் உத்தரவு
/
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வியை தொடர கலெக்டர் உத்தரவு
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வியை தொடர கலெக்டர் உத்தரவு
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வியை தொடர கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 12:24 AM
திருவள்ளூர்:பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான, மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு வாரமும் முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க செய்ய வேண்டும்.
பயிற்சிக்கு வரும் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கற்றல் கையேட்டை வழங்க வேண்டும்.
இடைநிற்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை, மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை, வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - திருவள்ளூர், தீபா - திருத்தணி, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.