/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் மொத்த விற்பனை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
/
டாஸ்மாக் மொத்த விற்பனை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
டாஸ்மாக் மொத்த விற்பனை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
டாஸ்மாக் மொத்த விற்பனை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 01:02 AM
திருவள்ளூர், டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்வதை கண்காணித்து, கடை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழித்தல், கள்ள சந்தையில் மது விற்பனை தடுப்பது குறித்த வாராந்திர ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது கள்ளச்சாராயம், மதுபானம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டுவரும் நபர்கள் மட்டுமல்லாமல் வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல், அது எந்த கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ அந்தக் கடையின் விற்பனையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டு போதைக்கு பொருட்கள் வருவதை கண்டறிந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை டாஸ்மாக் மண்டல மேலாளர் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்- பொது, வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள், கற்பகம்- திருவள்ளூர், தீபா- திருத்தணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.