/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி அகழ்வைப்பகத்தில் கல்லுாரி மாணவியர் ஆராய்ச்சி
/
பூண்டி அகழ்வைப்பகத்தில் கல்லுாரி மாணவியர் ஆராய்ச்சி
பூண்டி அகழ்வைப்பகத்தில் கல்லுாரி மாணவியர் ஆராய்ச்சி
பூண்டி அகழ்வைப்பகத்தில் கல்லுாரி மாணவியர் ஆராய்ச்சி
ADDED : பிப் 26, 2025 01:12 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி பகுதியில் தொல்லியல் துறையின் தொல் பழங்கால அகழ்வைப்பகம் உள்ளது. இங்கு பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தப்பட்ட கற்கால கருவிகள் உள்ளன.
இதை பார்வையிடவும், இது குறித்து அறிந்துக் கொள்வதற்கும், சென்னை எத்திராஜ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இருந்து, வரலாற்று துறை பேராசிரியர் வசந்தி தலைமையில், 20 மாணவியர் நேற்று காலை பூண்டி அகழ்வைப்பகத்திற்கு வந்தனர்.
இந்த மாணவியர்கள் கல்வி பயணமாக வந்துள்ளனர். இவர்களை தொல்லியல் அலுவலர் பொ.கோ. லோகநாதன் வரவேற்று, அகழ்வைப்பகத்தை சுற்றி காண்பித்தார்.
மேலும், அவர் பழைய கற்கால கருவிகளான கைக்கோடாரி, வெட்டு கருவிகள், சுரண்டி கள், கூர்முனைக் கருவிகள்,வட்டுகள், நுண் கற்கால கருவிகள் உருவத்தில் மிகச் சிறிதாக அளவுடைய சிறு கத்திகள், பிறைகள், சுரண்டிகள், அம்பு முனைகள் பற்றி மாணவியருக்கும் பேராசிரியருக்கும் விளக்கினர்.
மேலும், அரை வட்ட வடிவிலான தூண்டில்கள், புதிய கற்கால கருவிகள், பெருங்கற்கால பானை களான கருப்பு சிவப்பு மட்கலண்கள், மூடிகள்,தட்டுகள்,குடுவை கள், கிண்ணங்கள், ஈமப்பேழைகள், மூன்று கால் ஜாடி மற்றும் கனிம வகைகள் பற்றியும் விளக்கி கூறினார்.
அதை தொடர்ந்து மாணவியர் நேற்று முழுதும் தொல்லியல் துறையில் தங்கியிருந்து மாலை அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

