/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி - புழல் கால்வாய் சீரமைப்பு 'சிமென்ட் கான்கிரீட்' பணி துவக்கம்
/
பூண்டி - புழல் கால்வாய் சீரமைப்பு 'சிமென்ட் கான்கிரீட்' பணி துவக்கம்
பூண்டி - புழல் கால்வாய் சீரமைப்பு 'சிமென்ட் கான்கிரீட்' பணி துவக்கம்
பூண்டி - புழல் கால்வாய் சீரமைப்பு 'சிமென்ட் கான்கிரீட்' பணி துவக்கம்
ADDED : ஜூலை 06, 2024 01:46 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் பிரதான கால்வாய் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கரையின் இருபுறமும் 'சிமென்ட் கான்கிரீட்' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும்.
இங்கு, மழைக் காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் திருவள்ளூரில் இருந்து புழல் வரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, 'நம் நாளிதழில்' படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத் துறையினர் கடந்த வாரம் சீரமைப்பு பணியை துவக்கினர்.
கால்வாயை துார்வாரி, சேதமடைந்த 'சிமென்ட் சிலாப்' அகற்றிய நிலையில், தற்போது புதிதாக 'சிமென்ட் கான்கிரீட்' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிறைவு பெறும் என, பொதுப்பணி - நீர்வளத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.