/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி கோவில் குளங்களில் சீரமைப்பு பணி துவக்கம்
/
கும்மிடி கோவில் குளங்களில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : மே 25, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகவள்ளி அம்மன் கோவில் மற்றும் முக்கோட்டீஸ்வரர் கோவில் குளங்கள் துார்ந்து போய் புதர்கள் சூழ்ந்து சிதிலமடைந்து இருந்தன. இரு குளங்களையும் துார் எடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, அம்ருத் 2.0 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இரு கோவில் குளங்களிலும் தற்போது ஜே.சி.பி., வாயிலாக துார் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து படித்துறை, நடைப்பாதை, சுற்றுச்சுவர் மற்றும் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.