/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி நிறுவனத்தில் பண மோசடி கிளை மேலாளர் மீது புகார்
/
நிதி நிறுவனத்தில் பண மோசடி கிளை மேலாளர் மீது புகார்
நிதி நிறுவனத்தில் பண மோசடி கிளை மேலாளர் மீது புகார்
நிதி நிறுவனத்தில் பண மோசடி கிளை மேலாளர் மீது புகார்
ADDED : ஆக 06, 2024 10:58 PM
ஆரணி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில், 'கிரடிட் ஆக்சஸ் கிராமின்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
அதன் கிளை மேலாளராக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகில்ராஜ், 25, என்பவர் வேலை பார்த்தார். அவர் மீது அந்த நிதி நிறுவனத்தின் திருவள்ளூர் மாவட்ட ஏரியா மேலாளர் முரளி, 40 என்பவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022 முதல் 2023ம் ஆண்டு வரை நிதி நிறுவனஆரணி கிளை மேலாளர் முகில்ராஜ் பணியில் இருந்த போது, 16 பேரின் ஆவணங்களை பெற்று, கடன் வழங்கினார்.
பின் அந்த 16 பேரிடம் தவறுதலாக பணம் வந்து விட்டது எனக் கூறி, பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.
இந்த தகவல், தெரியவந்ததும், தணிக்கைக் குழு வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், நிதி நிறுவனத்திற்கு அவர், 4.38 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிந்தது.
பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்த அவர் இதுநாள் வரை பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். முகில்ராஜ் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் மீது வழக்கு பதிந்த திருவள்ளூர் மாவட்ட குற்ற பிரிவு போலீசார், முகில்ராஜை தேடி வருகின்றனர்.