ADDED : ஏப் 01, 2024 11:06 PM

அ நிறம் | அளவு
சாலையோரம் குப்பை எரிப்பு
திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே பாலம் அருகே சிலர் குப்பை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல், குப்பைக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகையால், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். பலமுறை வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குப்பை கொளுத்துவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ். பாண்டு, மத்துார் கிராமம்.
