
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேருந்து நிலையத்தில்
குடிநீர்வசதி இல்லை
மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணியர் சென்று வருகின்றனர். பயணியரின் தாகம் தீர்க்க இங்கு குடிநீர் வசதி இல்லை. இங்குள்ள குடிநீர் தொட்டி சேதம் அடைந்து கிடக்கிறது. குடிநீர் கிடைக்காமல் பயணியர் சிரமப்படுகின்றனர்.
கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை காசுகொடுத்து வாங்கி பருகும் நிலை உள்ளது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ஆர்.ஜி. கிருஷ்ணா, மீஞ்சூர்.