/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடப்பணி
/
கிடப்பில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடப்பணி
ADDED : செப் 15, 2024 01:08 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் கனகம்மாசத்திரம், வி.ஜி.கே.புரம் கிராமங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன் கனகம்மாசத்திரம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை துவக்கி அதன் வாயிலாக ஆவினுக்கு தினமும் 300 முதல் 400 லிட்டர் பால் வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கான அலுவலகம் தற்போது கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கட்டடம் கட்டி தர வேண்டும் என 20 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து 2023 ---- 24ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு பணி துவங்கியது.
தற்போது பேஸ்மட்டம் போடப்பட்டு பில்லர் அமைக்கப்பட்ட நிலையில் 9 மாதங்களாக பணி நடைப்பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்டடத்தை விரைந்து அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.