/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி
/
ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி
ADDED : மே 30, 2024 12:22 AM
சோழவரம்:சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் பளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன், 45; கட்டட தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் மாலை கிராமத்தின் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். ஆற்றில் தண்ணீர் தேங்கியிருந்த ஆழமான பகுதியில் வலையை வீச முயன்ற போது, வலையில் கால் சிக்கி, தண்ணீரில் மூழ்கினார்.
உடனடியாக, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் தேவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சோழவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.