/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் தொடர் மின்வெட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
/
பொன்னேரியில் தொடர் மின்வெட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
பொன்னேரியில் தொடர் மின்வெட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
பொன்னேரியில் தொடர் மின்வெட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
ADDED : ஜூன் 11, 2024 09:00 PM
பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, பொன்னேரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சிறு மழை பெய்தாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பலமணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை, பலத்த காற்றுடன் சிறிது நேரம் மழை பொழிந்தது. அப்போது ஏற்பட்ட மின்வெட்டு பல பகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்ததது.
மின்வாரியத்தை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் இல்லை. இதனால் கொதிப்படைந்த திருவாயற்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டும் சமாதானம் அடையவில்லை நள்ளிரவு துவங்கி, அதிகாலை 3:00மணி வரை போராட்டத்தை தொடர்ந்தனர். மின்வினியோகம் சீரானதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
அதேபோன்று மின்வெட்டால் சிரமத்திற்கு ஆளான, சின்னகாவணம் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள், நேற்று காலை, பொன்னேரி துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானம் பேசிய மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .