/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
5 ஏக்கர் அரசு நிலம் மேய்ச்சல் நிலமாக மாற்றம்
/
5 ஏக்கர் அரசு நிலம் மேய்ச்சல் நிலமாக மாற்றம்
ADDED : ஏப் 26, 2024 10:11 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் கோட்டத்தில், இருந்த மேய்ச்சல் நிலத்தில், 5 ஏக்கர் நிலத்தை அரசு வேறு திட்டத்திற்காக கையகப்படுத்தியது.
இந்த இடத்திற்கு பதிலாக, கலெக்டர் திருத்தணி வருவாய் கோட்டத்தில் இருக்கும் அரசு நிலத்தை, 5 ஏக்கர் நிலம் மேய்ச்சல் நிலமாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, தாசில்தார் மதியழகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சின்னகடம்பூர் மோட்டூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அந்த கிராமத்தில், சர்வே எண், 176/ 5 ல் அரசுக்கு சொந்தமாக 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பது கண்டுபிடித்து, தொடர்ந்து அந்த நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதற்கு கோட்டாட்சியர் தீர்மானித்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
விரைவில் மேய்ச்சல் நிலமாக வகைப்பாடு செய்து மாற்றப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

