/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பேரில் விரிசலடைந்த பயணியர் நிழற்குடை
/
திருப்பேரில் விரிசலடைந்த பயணியர் நிழற்குடை
ADDED : ஆக 06, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூண்டி:ராமஞ்சேரி -பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருப்பேர் கிராமம். இப்பகுதி மக்கள் திருத்தணி, திருவள்ளூர், கனகம்மாசத்திரம், பூண்டி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடையின் கூரை சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் விட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது. இதனால் அச்சமடைந்த பயணியர் உள்ளே சென்று அமர்வதை தவிர்த்து வருகின்றனர்.
சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.