/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெய்வேலி கிராமத்தில் விரிசலான குடிநீர் தொட்டி
/
நெய்வேலி கிராமத்தில் விரிசலான குடிநீர் தொட்டி
ADDED : செப் 07, 2024 07:30 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெய்வேலி ஊராட்சி. இந்த ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட வீடுகளில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமவாசிகளுக்கு, குடிநீர் வழங்க, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, மேல்நிலை தொட்டியில் நிரப்பி, பின் கிராமங்களில் உள்ள தெருக்குழாய் வழியாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி கிராமத்தின் நுழைவாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் மேல்நிலை தொட்டி, தற்போது சிதிலமடைந்து, சிமென்ட் காரை பெயர்ந்து, விரிசல் விட்டு பாழடைந்து உள்ளது.
இதனால், குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.